Friday, October 6, 2017

புதிய 0 Balance Account-ஐ RBI அறிமுகம் செய்துள்ளது

ரிசர்வ் பேங்க், BSBDA (Basic Savings Bank Deposit Account) என்ற புதிய 0 பேலன்ஸ் சேவிங்ஸ் அக்கௌன்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த BSBDA கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் வைத்திருக்க வேண்டியதில்லை.

இந்த BSBDA கணக்கை உங்கள் பகுதியில் உள்ள எந்த வங்கியிலும் தொடங்கலாம். கனக்குத் தொடங்க அருகில் உள்ள வங்கிக்குச் சென்று KYC (Know Your Customer) படிவத்தை நிரப்பி சம்மந்தப்பட்ட வங்கி அலுவலரிடம் கொடுத்து ஒப்புதல் பெறவேண்டும்.

இந்த BSBDA கணக்கிற்கான நிபந்தனை, உங்கள் கணக்கிலிருந்து பணத்தை மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே எடுக்க முடியும். NEFT, RTGS, Standing Instruction, EMI அனைத்துப் பரிவர்த்தனைகளும் உட்பட. கணக்கில் பணம் போடுவதற்கு நிபந்தனை எதுவும் இல்லை.

இந்த வகையில் தொடங்கப்பட்ட BSBDA கணக்கிற்கு எந்த ஒரு சேவை கட்டணமும் வசூலிக்கப் படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, March 11, 2016

வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50,000 கூடுதல் வரிவிலக்கு

2016-17 ஆம் நிதி ஆண்டில் புதிதாக வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு, ஆண்டிற்கான மொத்தத் தவணையின் வட்டித் தொகைக்கு 80EE பிரிவின் கீழ் கூடுதலாக ரூ.50,000க்கு வரிவிலக்கை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் 2016 பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இந்த வரிவிலக்கானது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள Sec-80Cன் அசலுக்கான வரம்பு ரூ.1,50,000 மற்றும் Sec-24ன் வட்டிக்கான வரம்பு ரூ.2,00,000 (Sec 24) இரண்டிற்கும் மேலாக கூடுதலானது.

நிபந்தனைகள்:
1. வீட்டின் மதிப்பு ரூ.50,00,000க்கும் உள்ளாக இருக்க வேண்டும்.
2. மொத்தக் கடன் தொகை ரூ.35,00,000க்கும் உள்ளாக இருக்க வேண்டும்.
3. 01/04/2016 முதல் 31/03/2017 வரையிலான தேதியில் வீட்டுக்கடன் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.
4. உங்களின் பெயரில் நீங்கள் வாங்கும் முதலாவது வீடாக இருக்க வேண்டும்.

87A பிரிவின் கீழ் ரூ.5,000 வருமான வரித் தள்ளுபடி!

பிப்ரவரி 29, 2016 அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின்படி, ஆண்டு வருமானத்தில் வரி செலுத்தவேண்டிய தொகை  ரூ.5,00,000 க்கும் கீழ் உள்ளவர்களுக்கு, 87A பிரிவின் கீழ் ஏற்கனவே உள்ள வருமான வரித் தள்ளுபடி (rebate) ரூ.2000 த்திலிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதி, 2016-17 நிதியாண்டிலிருந்து அமுலுக்கு வரும்.

இதன் அடிப்படையில் ஆண்டு வருமானம் ரூ.5,00,000க்கும் கீழ் உள்ளவகர்கள், ரூ.3,00,000 கழிந்த மீதமுள்ள தொகைக்கு மட்டும் முதலீடுகளைத் திட்டமிட்டால் போதும்.

Tuesday, February 2, 2016

பெருகிவரும் வருமான-சமத்துவமின்மை மிகவும் ஆபத்தானது!!!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய RBI கவர்னர் திரு. ரகுராம் ராஜன் அவர்கள், "அதிக வருமானம் வாங்குபவர்களுக்கே மேலும் மேலும் அதிக வருமானம் கிடைக்கும் சமத்துவமில்லாத நிலை பெருகிக்கொண்டே போனால் மக்களின் வாங்கும் திறன்(purchasing power) குறைந்து பெரும்பாலான தேவைகளை demand) ஓரங்கட்டிவிடும்" என்று கூறினார்.

ஏழை மக்கள் தங்களின் வருமானத்தின் ஒவ்வொரு ரூபாயையும் செலவு செய்கிறார்கள். பெரும் பணக்காரர்கள் பந்தயப் படகையோ (yacht), தனி விமானத்தையோ (private jet) வாங்கும் நிலையை எட்டியபிறகு அவர்களின் கைக்கு வரும் அதிகப்படியான வருமானத்தில் பெரிதாக ஏதும் செலவழிப்பதில்லை. இதனால் பெருமளவு பணம் பயனில்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இந்தியாவின் மக்கள் தொகையில் 1% மட்டுமே இருக்கும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த பணத்தில் 53% வைத்திருகிறார்கள் என சுவிஸ் வங்கியின் கிரெடிட் ஸுயிஸின் (Credit Suisse) ஒரு அறிக்கை சொல்கிறது. மேலும் 2000-2015 கால கட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்கனவே இருந்த வளத்துடன் சுமார் 2.3 லட்சம் கோடி டாலர் பணம் அதிகரித்தது. இந்த வளர்ச்சியில் 61% பணத்தை நாட்டில் 1% ஆக உள்ள பெரும் பணக்காரர்கள் மட்டுமே அனுபவித்தனர்.

இதேபோல் அமெரிக்காவில் 1979-2011 கால கட்டத்தில் மக்கள் தொகையில் 1% ஆக உள்ள பெரும் பணக்காரர்களின் சம்பளம் 2 மடங்கானது. ஆனால் ஒரு சராசரி உழைப்பளியின் சம்பளம் வெறும் 6% மட்டுமே அதிகரித்தது.

ராஜன் அவர்கள் 2010ல் Fault Lines என்ற புத்தகத்தில், "அமெரிக்காவில் பெருகிவரும் சமத்துவமின்மையும், பலவீனமான சமூக பாதுகாப்பு வளையமும் அந்நாட்டின் நிதி நெருக்கடிக்கான காரணங்களுள் முக்கிய பங்கு வகிக்கின்றன." என்று விவாதித்துள்ளார்.

"அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் அடிப்படைப் பிரச்சனையாக இருப்பது, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் எப்பொழுதும் நாட்டின் வளர்ச்சியினால் பலனடையாமலே இருப்பதுதான்" என்றும் குறிபிட்டுள்ளார்.

அதே சமயத்தில், OECD (Organisation for Economic Co-operation and Development) உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் "வருமான -சமத்துவமின்மை வளர்ச்சியை முடக்கிவிடும்" என்று விவாதித்துள்ளன.

வருமான-சமத்துவமின்மை நாட்டின் வளர்ச்சியில், கணிசமான மற்றும் புள்ளிவிவர அடிப்படையிலான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் வரியில்லா வருமானத்தில் (disposable income) சமநிலையை நிலைநிறுத்தும் மறுபங்கீட்டுக் கொள்கைகள் வளர்ச்சியைப் பாதிக்கும் விளைவுகள் எதையும் ஏற்படுத்திவிடவில்லை" என்று மற்றொரு அறிக்கைத் தெரிவிக்கிறது.


Saturday, January 30, 2016

வீட்டுக் கடன் பெற சிறந்த வங்கிகள்

31/03/2016 வரை SBIல்  புதிதாக வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு Processing Fee (0.25%) முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். மற்ற சமயங்களிலும் மிகவும் குறைவான Processing Fee (0.25%) வசூலிக்கும் ஒரே வங்கி SBI தான்.

ICICI வங்கியில் online மூலம் ஆவணங்கள் சமர்பிப்ப்பவர்களுக்கு *Processing Fee முற்றிலுமாக (0%) தள்ளுபடி செய்யப்படுகிறது.

தற்போது எந்த வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ floating interest rate வகையிலான வீட்டுக்கடனுக்கு Prepayment Penalty வசூலிப்பதில்லை. ஆனால் பெரும்பாலான வங்கிகள் fixed interest rate வகைக்கு 2% வரை Prepayment Penalty வசூலிக்கின்றன.


Interest rate (floating)
EMI per 1 lacs 
Processing Fee
9.55%
9.50% (பெண்கள்)
ரூ.877
ரூ.874 (பெண்கள்)
31-03-2016 வரை கட்டணம் இல்லை.
9.65%
ரூ.891
0.5% அல்லது
அதிகபட்சம் ரூ.20,000 + ரூ.1350 ஆவணக் கட்டணம்
9.55% 
9.50% (பெண்கள்)
ரூ.877 ரூ.874 (பெண்கள்)
0.5% அல்லது
10,000 + tax
9.55% 
9.50% (பெண்கள்)
ரூ.935
ரூ.932 (பெண்கள்)
0.0%* - 0.5%

9.60%
Rs.881
50 லட்சம் வரை: 10,000 + tax
50 லட்சத்துக்கும் மேல்: 15,000 + tax
9.60% - 9.65%
(28/02/2016 வரை குடியரசுதின சலுகை)
ரூ.873 - ரூ.884
1%  அல்லது குறைந்த பட்சம் ரூ.10,000/-
9.85% - 9.95%
ரூ.898 - ரூ.905
ரூ.5000 (விண்ணப்பக் கட்டணம்)


Tax Saving திட்டங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களிலும் EPF உடன் VPFம் சேர்ந்தால் சிறந்த திட்டமாகத் தெரிகிறது.

ELSS, NSC, FD, Pension Plans, Retirement Mutual Fund ஆகிய திட்டங்கள் குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவை.

சுகன்யா சம்ரித்தி யோஜனா மூலம் அதிப்படியான வட்டி விகிதமாக 9.20% பெறலாம்.



முதலீட்டு வரம்பு ஆண்டுக்கு வரி விலக்கு கால வரம்பு வட்டி விகிதம்
PPF ரூ.500 - ரூ.1,50,000 லாபத்திற்கு வரி விலக்கு உண்டு. 15 ஆண்டுகள் 8.70%
EPF
(Employee Provident Fund)
12% (அடிப்படை சம்பளத்தில்)
VPF திட்டத்தின் கீழ் ஊழியர்களின் பங்களிப்பை அதிப்படுத்தலாம்.

5 ஆண்டுகளுக்கு முன் 30,000க்கும் மேல் பணம் எடுத்தால் வரி செலுத்த வேண்டும்.    10 ஆண்டுகள் கணக்கைத் தொடர்ந்தால் ஓய்வூதியம் பெறலாம். 8.75%
NSC
(National Saving Certificate)
ரூ.500 - உச்ச வரம்பு கிடையாது. வட்டி லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் 8.50%
(5 வருடம்)
FD
(Fixed Deposit)
ரூ.100 - ரூ.1,50,000 வட்டி லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். 3-5 ஆண்டுகள்  7.75% - 8.25%
Life
Insurance
வரம்பு பொருந்தாது லாபத்திற்கு வரி விலக்கு உண்டு. பாலிசி காலம் முடியும் வரை பிரிமியம் செலுத்தும் ஆண்டுகளைப் பொறுத்தது.
Pension Plans ரூ.2000 - ரூ.25,000 லாபத்திற்கு வரி விலக்கு உண்டு. 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் எடுக்கலாம். சந்தை நிலவரத்தைப் பொறுத்தது.
NPS
(National Pension Scheme)
ரூ.6000 - உச்ச வரம்பு இல்லை. ஓய்வூ-தியத்திற்கு முதலீடு செய்யும் தொகை தவிர, மாத ஓய்வூதியம் உட்பட வரி செலுத்த வேண்டும். 60 வயதுக்கு முன் முதிர்ச்சி தொகையில் 80% அல்லது 60 வயதுக்குப் பிறகு முதிர்ச்சி தொகையில் 40% ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.  சந்தை நிலவரத்தைப் பொறுத்தது.
ELSS
(Equity Linked Saving Schemes)
ரூ.500 - ரூ.1,000 லாபத்திற்கு வரி விலக்கு உண்டு 3 ஆண்டுகள் பங்கு சந்தை நிலவரத்தைப் பொறுத்தது.
Retirement Mutual Fund ரூ.500 - உச்ச வரம்பு இல்லை. லாபத்திற்கு வரி விலக்கு உண்டு 3 ஆண்டுகள்

சந்தை நிலவரத்தைப் பொறுத்தது.
ULIPs ரூ.2000 - ரூ.25,000 முற்றிலும் வரி விலக்கு. 10 - 15 வருடம் சந்தை நிலவரத்தைப் பொறுத்தது.
SSY
(Sukanya Samriddhi Yojana)
ரூ.1,000 - ரூ.1,50,00 வட்டி மற்றும் முதிர்ச்சி
தொகைக்கு வரி விலக்கு உண்டு

பெண் குழந்தையின் 18 வயதுக்குப் பிறகு குறிப்பிட்ட அளவு தொகையை எடுக்க முடியும். 9.20%

Monday, January 25, 2016

LPG சிலிண்டருக்கு onlineல் பணம் செலுத்தலாம்!

LPG refill சிலிண்டருக்கு ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (24/01/2016) அறிமுகம் செய்தார்.


https://indane.co.in/
இனி சிலிண்டருக்குத் தேவையான பணத்தை வீட்டில் விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வேலைக்குச் செல்லும் தம்பதியர்களும், வயதானவர்களும் சிலிண்டர் புக்கிங் செய்யும்போதே ஆன்லைனில் பணத்தை செலுத்திவிட்டு நிம்மதியாக இருக்கலாம். சரியான சில்லறை இல்லை என்ற பிரச்சனையும் இனி இருக்காது.

Sunday, January 24, 2016

ரூ.5000/- வரையிலான Tax Refund உடனடியாக கிடைக்கும்

வரி செலுத்துவோர், IT Return தாக்கல் செய்தபிறகு, Tax Refund ஆனது ரூ.5000/- மற்றும் அதற்கு உள்ளாக இருப்பின், அந்தத் தொகையை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில்,  ஜனவரி 12 ஆம் தேதி CBDT (Central Board of Direct Taxes) சிறிய அளவிலான refund தொகையை ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகைக்கு பிடித்தம் செய்யாமல் உடனடியாக வரி செலுத்துவோரின் கணக்கில் திருப்பி செலுத்த வேண்டும் என பெங்களூரு CPCக்கு உத்தரவிட்டது.

இதன் காரணமாக, 2012-13 நிதியாண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக refund செய்யப்படாத 18,30,000 பேர்களுக்கு டிசம்பர் 01 முதல் ஜனவரி 10 வரையிலான 41 நாட்களில் சுமார் ரூபாய் 1800 கோடி refund செய்யப்பட்டுள்ளது.

Thursday, January 21, 2016

தங்கத்தின் மவுசு குறைகிறதா?!!!


ஏழு ஆண்டுகளில் 70 டிகிரியில் ஏற்றம் :

1986 முதல் 2005 வரையிலான சுமார் 20 ஆண்டு காலங்களில் மிகவும் நிதானமாக ஆமை வேகத்தில் போய்க்கொண்டிருந்த தங்கத்தின் விலைமதிப்ப்பு, 2005 க்குப் பிறகு 2006 முதல் 2012 வரையிலான 7 ஆண்டு காலங்களில் கிடு கிடுவென உயர்ந்து, 2012ல்  8 கிராம் (1 பவுன்) ஆபரண தங்கத்தின் விலை சுமார் ரூபாய் 24,500/- என உச்சத்தைத் தொட்டது.

வரலாறு காணாத சரிவு விகிதம்:

அதன்பின் 2012லிருந்து குறையத் தொடங்கிய தங்கத்தின் மதிப்பு விகிதாச்சார அடிப்படையில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவு வேகமாக சரிந்து வருகிறது. மேலும் பெருகிவரும் தொழில்நுட்பம் காரணமாக உலகப் பொருளாதாரத்திலும் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.


பொருள் முதலீடுகள் பண முதலீடுகளாக மாறுகின்றன:

இதனால் முதலீட்டலர்களின் கவனம் தங்கம் மற்றும் நிலத்திலிருந்து வங்கித் திட்டங்கள், பங்கு வர்த்தகம் மற்றும் அரசின் நல்ல லாபம் தரும் திட்டங்கள் நோக்கித் திரும்புகிறது.

தங்கமே வேண்டாமா?

உங்களின் முதலீடுகளுக்கான திட்டமிடுதலில் 5%-10% மட்டும் தங்கத்திற்கு ஒதுக்குங்கள். அதாவது ஒரு ஆண்டில் நீங்கள் ருபாய் 1 லட்சத்தை முதலீடு செய்வதாக இருந்தால், ரூபாய் 5,000 முதல் 10,000 வரையில் மட்டும் தங்கத்திற்காக ஒதுக்குங்கள். ஏற்கனவே உங்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பபையும் கணக்கில் கொள்ளுங்கள்.

Wednesday, January 20, 2016

Income Tax Refund கிடைக்க மூன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம்!

வரி செலுத்துபவர்களுக்கு, அவர்கள் IT Return தாக்கல் செய்த நிதி ஆண்டு முடிந்து 6 மாதத்திற்குள் refund செய்ய வேண்டிய தொகையை, Income Tax துறை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

1-7-2012ல் அறிமுகம் செய்யப்பட்ட 143(1D) பிரிவின் படி, வருமான வரித் துறை refund தொகை சம்பந்தமாக,  refund கிடைக்க வேண்டிய நபருக்கு, முதலீடு ஆவணங்கள் மற்றும் கணக்கீடுகள் குறித்து மேலும் விளக்கம் கேட்டு 143(2) பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பலாம்.

இவ்வாறு 143(2) பிரிவின் நோட்டீஸ் அனுப்பியபின், சம்பந்தப்பட்ட நபரின் Income Tax கணக்குகளை மறு ஆய்வு செய்து refund தொகையை செலுத்த வருமான வரித்துறை மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

இனி இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் இருக்க, வரும் 1-7-2016 முதல் 143(1D) நீக்கம் செய்யப்படவுள்ளது.

Tuesday, January 19, 2016

ITR-V Verification-க்கு, ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் IT-Return ஐ தாக்கல் செய்துபிறகு ITR-V படிவத்தை இன்னும் verification செய்யாமல் இருந்தாலோ அல்லது e-verification செய்தும் தங்கள் மொபைல் போனுக்கோ இ-மெயிலுக்கோ verification செய்யப்படவில்லை என்று செய்தி வந்தாலோ, https://incometaxindiaefiling.gov.in/e-Filing/UserLogin/LoginHome.html என்ற வலைதளத்தில் login செய்து Dashboard லிருந்து ITR-V படிவத்தை டவுன்லோட் செய்து, கையெழுத்திட்டு, அந்த படிவத்தின் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள Income Tax Department - CPC அலுவலக முகவரிக்கு வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு Ordinary (அல்லது) Speed Post மூலம் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு ITR-V படிவத்தை verification செய்யவில்லை என்றால் tax-redund கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

விரைவில் ATMல் Vehicle Insurance!

விரைவில் வாகன காப்பீட்டை (Vehicle Insurance) ATM மூலம் பணம் செலுத்தி பெற முடியும் என Insurance Regulatory and Development Authority of India (IRDAI)யின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் தரணிகந்தி கூறியுள்ளார்.

முதற்கட்டமாக, third party insurance அறிமுகம் செய்யப்படும்.

வாகன காப்பீடு இல்லாமல் நாட்டில், 7 கோடிக்கும் மேலான வாகனங்கள் ஓடுகின்றன. இது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார கேடுகளை விளைவிப்பதால் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

இதுவரை, 15 கோடிக்கும் மேல் வாகனங்கள் பதிவாகியுள்ளன. பெரும்பாலானோர் வாகன பதிவின்போது வாங்கப்படும் காப்பீடு காலாவதி ஆனபின் மீண்டும் புதுப்பிக்கத் தவறிவிடுகிறார்கள்.

வாகன காப்பீடு வாங்கும் வழிமுறைகள் சுலபமாக்கப்படும் பொழுது இதுபோன்ற பிரச்சனைகளை சிறப்பாக கையாள முடியும்.

Source: The Hindu BusinessLine

Sunday, January 17, 2016

Start-up நிறுவனங்கள் 3 ஆண்டுகள் வரிவிலக்கை 5 ஆண்டுகளில் பெறலாம்.

பிரதமர் மோடி அவர்களின் Startup Action Plan ல் அறிவிக்கப்பட்ட Startup நிறுவனங்களுக்கான 3 ஆண்டுகள் வரிவிலக்கு மற்றும் பெரு நிறுவனங்களுக்கான 25% வரி குறைப்பு போன்ற சலுகைகளைப் பெற தங்கள் நிறுவனம் மார்ச் 2019க்குள் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

முதல் 2 ஆண்டுகள் பெற்ற லாபத்திற்கு வரி விலக்கு பெற்று, 3ஆம் ஆண்டில் நிறுவனம் லாபம் ஈட்டவில்லை என்றால், அதற்கான வரி விலக்கை 4ஆம் ஆண்டிலோ, 5ஆம் ஆண்டிலோ லாபம் ஈட்டும்போது பெற்றுக் கொள்ளலாம். இதன் அடிப்படையில், மார்ச் 2019க்குள் செயல்படத் தொடங்கும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டு வரி விலக்கைப் பெற 5 ஆண்டுகள் வரை அவகாசம் கிடைக்கும்.

2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் வரிச் சலுகை சம்பந்தமான் முழு விவரங்களும் அறிவிக்கப்படும்.

Start-up நிறுவனத்திற்கான வரையறைக்கு உட்பட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கு உள்ளாக தொடங்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டுக்குள் செயல்பாடுகளைத் தொடங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த 3 ஆண்டு வரி விலக்கு பொருந்தும்.

இந்த வரிச் சலுகைத் திட்டமானது, மார்ச் 2024 வரை (8 ஆண்டுகள்) நடைமுறையில் இருக்கும். சலுகை காலத்தில், நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்கக்கூடாது. 

Thursday, January 14, 2016

உங்களுக்கும் Income TAX நோட்டீஸ் வரலாம்

கீழ்க்கண்ட காரணங்களுக்காக உங்களுக்கும் வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வரலாம்;

வருமானத்திற்கும் முதலீடு மற்றும் செல்வினங்களுக்கும்  இடையே முரண்பாடு இருந்தால்:
வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் க்ரெடிட் கார்ட் மூலம் செய்யப்படும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் PAN கார்ட் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியவரும்.

TDS வரவு வைக்கப்படவில்லை என்றால்:
மாத மாதம் உங்கள் சம்பளத் தொகையின் மீது பிடித்தம் செய்யப்படும் வரித் தொகையின் விவரங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை Form-26AS வரவு வைப்பதன் மூலம், உங்கள் நிறுவன ஆடிட்டர் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு நோட்டீஸ் வரலாம்.
இதைக் கீழ்க்கண்ட இணையதளத்தில் April, July, October, January ஆகிய மதங்களில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/UserLogin/LoginHome.html

உங்கள் கணக்கில் வருமானமே காட்டப்படவில்லை என்றால்: 
மாத வருமானதாரர்கள் சம்பளமில்லாத நீண்ட விடுப்பில் சென்றாலோ, ஒரு கம்பெனியிலிருந்து வேறு கம்பெனி மாரும்போது ஏற்படும் இடைவெளியின் காரணமாகவோ வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு இருக்காது. கம்பெனி மாற்றத்தின் போது முன்னாள் கம்பெனியின் வருமானம் கணக்கில் காட்டப்படவில்லை என்றால் நிச்சயம் நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது.

ஒரே சமயத்தில் பெரிய அளவு தொகையை வரி விலக்காகக் கோரினால்: 
முன்கூட்டியே வரி விலக்கிற்கான முதலீடுகளைத் திட்டமிடாமல், கடைசி நேரத்தில் ஏதாவது முதலீடுகளை செய்து மிகப் பெரிய தொகைக்கான ஆதாரங்களை சமர்பித்தால், ஏற்கனவே உங்கள் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட வரிப்பணத்தை, வருமான வரித்துறை உங்களிடம்  திரும்ப கொடுக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளை வருமான வரித்துறை விரும்பாத காரணத்தால் மறுஆய்வு செய்யக்  கோரி நோட்டீஸ் அனுப்பப்படும்.

ITR - V படிவத்தை சமர்பிக்கவில்லை என்றால்: 
உங்களது நிறுவன ஆடிட்டர் வருமான வரி விவரங்களை TDS மூலம் Income TAX துறைக்கு தாக்கல் செய்துவிட்டால் மட்டும் போதாது. நீங்கள் கையெழுத்திட்ட ITR - V படிவத்தை Income TAX துறைக்கு நேரிலோ/தபாலிலோ கட்டாயமாக அனுப்ப வேண்டும்.

Wednesday, January 13, 2016

NPS - அதிக வருமான வரி செலுத்துவோருக்குக் கை கொடுக்குமா?

2015-16 நிதியாண்டில் இருந்து NPS (National Pension Scheme) திட்டத்தின் மூலம் 80C ன் 1.5 லட்சம் வரம்பைத் தாண்டி மேலும் 50,000 முதல் 1,50,000 வரை வருமான் வரி விலக்கு பெற வாய்ப்பு.

Sec-80CCD1
ஊழியர்களின் பங்களிப்பாக  10% அடிப்படை ஊதியம் (Basic+DA). இது ஏற்கனவே உள்ள 80Cன் ரூ.1,50,000 லட்சம் வரம்புக்கு உட்பட்டது.

Sec-80CCD1(b)
2015-16 நிதியாண்டில் புதிததாக சேர்க்கப்பட்ட ரூ.50,000/-. இது ஏற்கனவே உள்ள 80Cன் ரூ.1.5 லட்சம் வரம்புக்கு வெளியில்.

Sec-80CCD2 
நிறுவனத்தின் மூலம் NPS கணக்கு தொடங்கினால், நிறுவனத்தின் பங்களிப்பாக 10% அடிப்படை ஊதியம் (Basic+DA). இது ஏற்கனவே உள்ள 80Cன் ரூ.1.5 லட்சம் வரம்புக்கு வெளியில். அடிப்படை ஊதியம் ஆண்டுக்கு ரூ.5,00,000/- எனில் 10% x 5,00,000 = ரூ.50,000/-

இந்த வகையில் Sec-80CCEன் கீழ் அதிகபட்ச வரி விலக்குக் கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது;
80CCD1 + 80CCD1(b) = 2,00,000 (நிச்சயமான வரி விலக்கு )
80CCD1 + 80CCD1(b) + 80CCD2 = 2,50,000 (நிறுவனத்தின் மூலம் NPS கணக்கு தொடங்கினால் மட்டும்)

கீழ்க்கண்ட இரண்டு வழிகளில் NPS கணக்கு தொடங்கலாம்;

Tier-I
ஓய்வூதியம் மற்றும் வரி விலக்கு. 60 வயதுக்கு முன் பணம் எடுக்க முடியாது. ஆண்டுக்குக் குறைந்த பட்சம் ரூபாய் 6,000 முதலீடு செய்ய வேண்டும்.

Tier-II
வரி விலக்கு மட்டும். தேவையானபோது பணம் எடுக்க முடியும். Tier-I  கணக்கு இருப்பவர்கள் மட்டுமே Tier-II கணக்கு பெற முடியும்.

இணையம் மூலம் NPS கணக்கு பதிவு செய்ய;
https://enps.nsdl.com/eNPS/LandingPage.html

கவனிக்க: NPS திட்டம் EET வகையில் செயல்படுவதால் NPS-Returnக்கு வரி செலுத்த வேண்டும்.